உள்நாடு

பாடசாலைக்குள் கசிப்பு விற்ற மாணவன் கைது!

(UTV | கொழும்பு) –

கலவானை பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவன் ஒருவர் பாடசாலைக்குள் கசிப்பு விற்பனை செய்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன்போது குறித்த பாடசாலையின் ஆசிரியர் ஒருவரால் பிடிபட்டதையடுத்து அவர் கலவானை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த பாடசாலையில் 9ம் ஆண்டு படிக்கும் மாணவன் ஒருவரே இவ்வாறு கசிப்பு விற்றுள்ளார். இதையடுத்து குறித்த மாணவர் கடுமையாக எச்சரித்து விடுவிக்கப்பட்டதாக கலவானை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மாணவன் இந்த கசிப்பை தண்ணீர் போத்தலில் கொண்டுவந்து பாடசாலையில் வைத்து கோப்பையில் ஊற்றி உயர்தர மாணவர்களுக்கு விற்பனை செய்ததாக கலவானை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பல்கலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்க கோரிக்கை

‘ரணிலுக்கு பிரதமர் பதவியை வழங்கும் திட்டம் இல்லை’ – SLPP

2021 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நவம்பரில்