உள்நாடு

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான சிறந்த சூழல் இல்லை

(UTV | கொழும்பு) – பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான உரிய திட்டங்களை கல்வி அமைச்சு முன்வைக்கும் பட்சத்தில் அதற்கான அனுமதி வழங்கப்படும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதுவரையில், பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான சிறந்த சூழல் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாளாந்தம் தொற்று உறுதியாகும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டு வருகின்றது.

எனினும், கொரோனா பரிசோதனைகள் தொடர்ந்தும் பாரியளவில் மேற்கொள்ளப்படுகின்றன.

ஒரு சில நேரங்களில் நாளாந்த நோயாளர்களின் முழு அறிக்கையும் சுகாதார அமைச்சுக்கு கிடைக்கப் பெறுவதில்லை. அதில் சில தாமதம் ஏற்படும்.

அவ்வாறான தரவுகள் தொற்று நோயியல் தடுப்பு பிரிவினால் பிந்திக்கிடைக்கப்பெற்ற தரவுகளாக மொத்த நோயாளர்களுடன் சேர்க்கப்படும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

இலங்கை பொலிஸின் சமூக ஊடக கணக்குகள் மீது சைபர் தாக்குதல் – YouTube தவிர ஏனைய வலைத்தளங்கள் வழமைக்கு

editor

MT New Diamond – தீ வெற்றிகரமாக கட்டுப்பாட்டினுள்

ஹரீன், மனுஷ மீண்டும் UNPக்குள்….!