உள்நாடு

பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான திகதி குறித்து சரியான தீர்மானமில்லை

(UTV | கொழும்பு) – இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான திகதி குறித்து சரியான தீர்மானம் எடுக்கப்படவில்லையென அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எனினும், ஜூன் 16 ஆம் திகதி வரை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் பிற்போடப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையென, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மே மாதம் 11 ஆம் திகதி பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகுமென, அரசாங்கம் ஏற்கெனவே அறிவித்துள்ள போதிலும், குறித்த தினத்தில் ஆரம்பிக்க முடியாதேற்படுமென, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று(02) மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் தெரிவித்திருந்தார்.

Related posts

மின்சார சபை ஊழியர்களிடம் சேகரிக்கப்பட்ட நிதியை மீண்டும் வழங்கவேண்டும் – சம்பிக்க ரணவக்க

editor

அரசியல் வாதிகளுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் நிறுத்தப்படும் – அநுர

editor

ஊழல்வாதிகள் கடுமையாக கலக்கமடைந்துள்ளார்கள் – பிரதி அமைச்சர் சுனில் வட்டகல

editor