சூடான செய்திகள் 1

பாடசாலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட சுற்றறிக்கை

(UTV|COLOMBO) நாட்டில் தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலைக்கு மத்தியில், பாடசாலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தினால், சுற்றிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, பாடசாலை தரப்பினரை தெளிவுபடுத்தல், பாதுகாப்பு குழுவை நிறுவுதல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கை என்பன குறித்து இந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, பாடசாலைக்குள் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக, அதிபர்கள், பிரதி அதிபர்கள் உள்ளிட்ட ஆசிரியர் குழாம் மற்றும் பெற்றோர்கள், மாணவர்கள் ஆகியோரின் பங்கேற்புடன், பாதுகாப்புக் குழு மற்றும் உப குழுக்களை நிறுவுவதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவு

உலகின் மிகப்பெரிய சந்தையில் இலங்கையின் ஏற்றுமதிகள் இருமடங்காக அதிகரிப்பு’ அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

ஜனாதிபதியினால் விசேட குழு ஸ்தாபிப்பு