உள்நாடுபிராந்தியம்

பாசிக்குடா தென்னந்தோட்டத்தில் தீப்பரவல்

பாசிக்குடா தனியார் சுற்றுலா விடுதிக்கு அருகிலுள்ள தென்னந் தோட்டம் ஒன்றில் தீ பரவிய சம்பவமொன்று புதன்கிழமை (1) இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் சுந்தரலிங்கம் சுதாகாரனின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இவ்விடயத்தில் உடனடியாக செயற்பட்ட தவிசாளர் வாழைச்சேனை, ஓட்டமாவடி பிரதேச சபையின் தண்ணீர் பவுசர்கள் மற்றும் மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைக்கும இயந்திரம் ஆகியவற்றின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

குறித்த தீப்பரவலை கட்டுப்படுத்த களத்தில் நின்று செயற்பட்ட பிரதேச செயலாளர், பகுதி கிராம உத்தியோகத்தர், பொலிஸார், தீயணைப்பு ஊழியர்கள், சபைகளின் ஊழியர்கள் அனைவருக்கும் தவிசாளர் எஸ்.சுதாகரன் நன்றிகளை தெரிவித்துள்ளார்.

இந்த தீ சம்பவத்தில் பல தென்னை மரங்கள் தீயில் கருகி சேதமாகியுள்ளனர்.

இவ்வாறான தீப்பரவல் சம்பவங்கள் பலமுறை வாழைச்சேனை பகுதியில் இடம்பெற்றுள்ளதாகவும், தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர 30 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள மட்டக்களப்பு மாநகர சபையின் உதவியை நாடி வருவதாகவும் தவிசாளர் குறிப்பிட்டார்.

வாழைச்சேனை பிரதேசத்துக்கு தீயணைப்பு இந்திரம் மிக முக்கியமாக தேவைப்படுவதாகவும் அதனை பெற்றுக்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டுமெனவும் தவிசாளர் மேலும் தெரிவித்தார்.

-எச்.எம்.எம்.பர்ஸான்

Related posts

கொள்கை வட்டி வீதம் தொடர்பிலான தீர்மானம்

ஓட்டமாவடியில் திடீரென களமிறங்கிய மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள்!

editor

பலத்த மழை பெய்ய வாய்ப்பு

editor