(UTV|PAKISTAN) பாகிஸ்தான் முன்னாள பிரதமர் நவாஸ் ஷெரீப், ஊழல் வழக்கில் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, லாகூரில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் நவாஸ் ஷெரீப்புக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அவருக்கு சிறைக்குள்ளேயே மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
அதனை தொடர்ந்து, உடல்நிலையை காரணம் காட்டி நவாஸ் ஷெரீப்புக்கு பிணை வழங்கக்கோரி இஸ்லாமாபாத் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அவருக்கு பிணை வழங்க மறுத்துவிட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
