வகைப்படுத்தப்படாத

பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி சர்தாரி கைது

(UTV|PAKISTAN) பாகிஸ்தானில் போலி வங்கி கணக்குகளை தொடங்கி அதில் பணத்தை சேர்த்து, வெளிநாட்டுக்கு அனுப்பிய குற்றச்சாட்டு தொடர்பில் பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி சர்தாரி மற்றும் அவருடைய சகோதரி பர்யால் தால்பூருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அந்நிலையில் அந்நாட்டு ஊழல் தடுப்பு பிரிவினர் விசாரணைகளை தீவிரப்படுத்தியதற்கு இடையே அவர் பிணை கோரி இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றில் மனுதாக்கல் செய்தார், ஆனால் நீதிமன்றம் அதனை நிராகரித்துவிட்டது.

இதனையடுத்து சர்தாரியை ஊழல் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ள நிலையில் அவருடைய சகோதரி இன்னும் கைது செய்யப்படவில்லை,

இதுதொடர்பாக முழுமையான விசாரணைகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Related posts

Minister Harin asks SLC to overhaul team’s coaching staff

விரைந்து பரவும் காட்டுத்தீ

தரம் 1ற்கான அனுமதிப்பத்திரங்களை பாடசாலை அதிபர்களிடம் கையளிக்கலாம்