வகைப்படுத்தப்படாத

பாகிஸ்தான் நிலநடுக்கம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTVNEWS|COLOMBO) – பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நேற்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 300-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக இந் நிலநடுக்கம் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலைகள் இரண்டாக பிளந்து அதில் சென்றுகொண்டிருந்த வாகனங்கள் பள்ளத்தில் விழுந்து நொறுங்கியதில் பெண் உட்பட இரண்டு பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியானது.

இந்நிலையில், நிலநடுக்கத்தில் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும், 300-க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நிலநடுக்கத்தால் பல வீடுகள் விழுந்து தரைமட்டமாகியுள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

Related posts

Sri Lanka unhappy with India’s budget allocation, keen for review

Discount bonanza from SriLankan

Double-murder convict hacked to death in Hambantota