வகைப்படுத்தப்படாத

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் மேல் சபையின் பிரதித் தலைவரை இலக்கு வைத்து குண்டுத்தாக்குதல் – 25 பேர் பலி!

(UDHAYAM, COLOMBO) – பாகிஸ்தானின், பலொகிஸ்தான் பிராந்தியத்தில் நேற்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு உரிமை கோரியுள்ளது.

இந்தத் பலியானோர் 25 பேர் பலியானதுடன், 37 பேர் காயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் மேல் சபையின் பிரதித் தலைவரான அப்துல் கபூர் ஹைதரி என்பவரை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் மேல்சபை பிரதித் தலைவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

எனினும், குறித்த மேல் சபை பிரதித் தலைவரின் வாகன சாரதி ஊழியர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் வீதிநாடகம்

சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் 12 பேர் உயிரிழப்பு

இமயமலைக்கு ஏற்படப் போகும் பேரழிவு?