உலகம்

பாகிஸ்தான் சபாநாயகருக்கு கொரோனா தொற்று உறுதி

(UTV | கொவிட் 19) – பாகிஸ்தான் பாராளுமன்ற தேசிய சபை  சபாநாயகர் ஆசாத் குவாசிருக்கு (Asad Qaiser ) கொரோனா நோய் உறுதியாகியிருப்பதால், நோய் பரவலை தடுக்க தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.

காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்ததால் ஆசாத் குவாசிர் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டார்.

இதில் அவருக்கு கொரோனா நோய் உறுதியாகியிருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து ஆசாத் குவாசிர் தம்மை தாமே வீட்டில் சுயதனிமைக்கு உட்படுத்திக் கொண்டுள்ளார்.

இதேபோல் ஆசாத் குவாசிரின் மகன், மகள் ஆகியோருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளதால் அவர்களும் தங்களை தாங்களே தனிமைபடுத்திக் கொண்டுள்ளனர்.

Related posts

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் 10 இலட்சம் பேர் பாதிப்பு

2025 புத்தாண்டு மலர்ந்த முதலாவது நாடு – கோலாகலமாக வரவேற்ற மக்கள்

editor

“ரஜினிகாந்த்தை- அழைத்தது இலங்கை அரசு”