விளையாட்டு

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பென் ஸ்டோக்ஸ் விலகல்

(UTV|நியூசிலாந்து ) – பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்டில் இருந்து இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சகலத் துறை ஆட்டக்காரர் பென் ஸ்டோக்ஸ் விலகியுள்ளார்.

பென் ஸ்டோக்ஸ் அவசரமாக நியூசிலாந்து செல்ல இருப்பதால் போட்டியில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, இங்கிலாந்து கிரிக்கெட் சபை மற்றும் பென் ஸ்டோக்ஸ் குடும்பம் ஆகியவை இது அவரது தனிப்பட்ட விடயம் தொடர்பில் மேற்கொண்டு எதுவும் கேட்க வேண்டாம் என தெரிவித்துள்ளது.

கடந்த சில மார்ச் மாதத்தின் போது பென் ஸ்டோக்ஸின் தந்தை உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவர் நியூசிலாந்தில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் பென் ஸ்டோக்ஸிற்கு பதிலாக ஜக் கிராலியா அல்லது சகலதுறை ஆட்டக்காரர் சாம் கரணாவை களமிறக்க முடிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நாணய சுழற்சியில் இந்தியா வெற்றி

அசேல குணவர்தனவின் அபார பிடியெடுப்பு

பயிற்சி ஆலோசகரானார் திலான் சமரவீர