பாகிஸ்தானில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு உள்ளிட்டவற்றால் கடந்த 48 மணி நேரத்தில் 320 பேர் மழை வெள்ளத்தில் சிக்கி பலியாகி உள்ளனர்.
ஏராளமான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வரும் நிலையில் பாதைகள்சேதமடைந்துள்ளதால் மீட்பு பணி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 3 நாட்களாக பாகிஸ்தானில் பல இடங்களில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக, பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் பல இடங்களில் கனமழை பெற்கிறது.
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள இந்த மாகாணம் மலையையொட்டி அமைந்துள்ளது.
இதன் தலைநகர் பெஷாவர் ஆகும். இந்த மாகாணத்தில் கடந்த 48 மணி நேரத்தில் பல இடங்களில் கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
மாகாணத்தில் உள்ள புனர், பஜௌர், ஸ்வாட், ஷாங்க்லா, மன்சேரா மற்றும் பட்டாகிராம் உள்ளிட்ட இடங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பேரிடர் பாதிக்கப்பட்ட இடங்களாக அவை அடையாளம் காணப்பட்டுள்ளது.
பல இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. வாகனங்கள் தண்ணீரில் அடித்து செல்லபட்டுள்ளன. 320 பேர் வரை பலியாகி உள்ளனர்.
வெள்ளம் இன்னும் குறையாததால் மீட்பு பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மீட்பு படையினர் மீட்பு பணிகளை மேற்கொள்ள முடியாமல் திணறி வருகின்றனர்.
9 மாவட்டங்களில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. 2000 இற்கும் அதிகமானவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.