வகைப்படுத்தப்படாத

பாகிஸ்தானில் ஏராளமான சிறுவர்கள் HIV தொற்றுக்குள்ளாகி இருப்பது கண்டுறியப்பட்டுள்ளது

(UTV|PAKISTAN) பாகிஸ்தானில் ஏராளமான சிறுவர்கள் HIV தொற்றுக்குள்ளாகி இருப்பது கண்டுறியப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் தொடக்கம், தீவிர காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட ஏராளமான சிறார்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், குறித்த சிறார்களின் நோய்த் தாக்கத்தைக் கண்டறிவதற்காக, இரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோதே, அவர்களுக்கு HIV தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை, பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் HIV தொற்றுடைய 607க்கும் அதிகமானோர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களில் பெரும்பாலானவர்கள் சிறுவர்கள் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

 

Related posts

212 Drunk drivers arrested within 24-hours

පූජිතගෙන් ප්‍රකාශයක් ගන්න CID සුදානම්

சம்பூர் இயற்கை எரிவாயு மின்னுற்பத்தி நிலைய வேலைத்திட்டத்தை கைவிட தீர்மானம்