வகைப்படுத்தப்படாத

பஸ், லொறிகளுக்கு மண்ணெண்ணெய் விநியோகிக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் அனுமதிப்பத்திரம் இரத்து

(UTV|COLOMBO)-பஸ் வண்டிகள் மற்றும் லொறிகளுக்கு மண்ணெண்ணெய் விநியோகிப்பதை உடனடியாக நிறுத்துமாறு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இந்த அறிவுறுத்தலை மீறும் நிரப்பு நிலையங்களின் அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்படும் என்று அமைச்சர் அறிவித்துள்ளார்.

தரக்குறைவான எரிபொருளை நாட்டிற்கு கொண்டுவருவதை இன்னமும் நிறுத்த முடியாதுள்ளதாக அமைச்சர் நேற்று பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தின் மீதான குழுநிலை விவாதத்தின் போது குறிப்பிட்டார்.

மின்சக்தி, எரிசக்தி, பெற்றோலிய வள அபிவிருத்தி, கடற்றொழில் நீரியல்வள அபிவிருத்தி ஆகிய அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு நிறைவேற்றப்பட்டது. இந்த விவாதத்தில் கருத்து வெளியிட்ட அமைச்சர் அர்ஜுண ரணதுங்க,

15 ஆயிரம் மெற்றிக் தொன் எரிபொருளை களஞ்சியப்படுத்தக்கூடிய தாங்கியொன்றை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும் 6 எண்ணெய் தாங்கிகள் கொலன்னாவையில் நிர்மாணிக்கப்படும். விமானங்களுக்கு எரிபொருளை விநியோகிப்பதற்காக அதிவேக நெடுஞ்சாலைக்கு அண்மித்ததாக கட்டுநாயக்க வரை புதிய குழாய் கட்டமைப்பொன்று நிர்மாணிக்கப்படும். அதேவேளை விமான நிலைய எரிபொருள் விநியோக கட்டமைப்பு அபிவிருத்தி செய்யப்படும். எரிபொருள் நிரப்பு நிலையங்களை பரிசோதிக்கும் நடைமுறையொன்றும் ஏற்படுத்தப்படுமென்று அமைச்சர் அர்ஜுண ரணதுங்க மேலும் தெரிவித்தார்.

 

alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

How to get UAE tourist visa fee waiver for kids

லண்டன் கட்டிட தீ விபத்து – பலியானவர்கள் அடையாளம் காண முடியாத நிலையில்…

நச்சுக் காற்றினால் கண்கள், மூக்குகளில் ரத்தக் கசிவு -அதிர்ச்சியில் மக்கள்