வகைப்படுத்தப்படாத

பஸ் மீது பெற்றோல் குண்டு வீச்சு

(UTV|COLOMBO)-மொனராகலையில் இருந்து குருநாகல் நோக்கி பயணித்த பஸ் மீது இன்று அதிகாலை பெற்றோல் குண்டு வீசப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அதிகாலை 04.30 அளவில் கொடகவெல – பல்லேபெந்த பகுதியில் வைத்து இனம்தெரியாத சிலர், பஸ்ஸை மறித்து சாரதியின் ஆசனத்தை நோக்கி குண்டை வீசிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்போது, சுமார் 10 பயணிகள் பஸ்ஸினுள் இருந்துள்ளனர்.

இதனால் படுகாயமடைந்த பஸ் சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட காரணங்களே இந்தத் தாக்குதலுக்கு காரணமாக இருக்கலாம் என, பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கொடகவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள
REG<space>utv 
என Type செய்து 77000 என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.

 

Related posts

பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு

Four suspects held with 64g of Kerala cannabis

Serena Williams fined for damaging match court