உள்நாடு

பஸ் சோதனைக்கு எதிர்ப்பு – பணிப்புறக்கணிப்பு தொடர்பில் இறுதித் தீர்மானம் இன்று

பொலிஸாரினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பஸ் சோதனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆரம்பிக்கப்படவுள்ள பணிப்புறக்கணிப்பு தொடர்பில் இன்று (08) இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த பிரச்சினைகள் தொடர்பில் இன்று காலை பதில் பொலிஸ்மா அதிபருடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேவர்தன தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இன்று (08) நண்பகல் 12 மணிக்குள் தங்களது முடிவை அறிவிப்பதாக கெமுனு விஜேரத்ன மேலும் தெரிவித்தார்.

Related posts

கடலில் மிதந்து வந்த பாரிய தண்ணீர்த்தாங்கி – அதிர்ச்சியில் மீனவர்கள்

editor

1996 உலகக் கிண்ணத்தை வெற்றிகொண்ட வீரர்களை சந்தித்தார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

editor

காத்தான்குடி கோட்ட கல்வி பிரச்சினையை தீர்த்த செந்தில் தொண்டமான், ஹிஸ்புல்லா!