உள்நாடு

பஸ் சேவைகள் குறித்து இதுவரை 143 முறைப்பாடுகள்

சித்திரை புத்தாண்டு காலத்தில் முன்னெடுக்கப்பட்ட பஸ் சேவைகள் குறித்து இதுவரை 143 முறைபாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்தது.

அதிக கட்டணங்கள் அறவிடப்பட்டமை, பயணிகளை தரம் குறைவாக நடத்தியமை, அதிக வேகம் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை முன்வைத்தே அதிகமான முறைபாடுகள் பதிவாகியுள்ளன.

இந்த அனைத்து முறைபாாடுகள் தொடர்பான விசாரணகளை எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு பின்னர் ஆரம்பிக்கவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

1955 எனும் துரித தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பை ஏற்படுத்து முறைபாடுகளை முன்வைப்பதற்கான சந்தர்ப்பம் பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பண்டிகைக்காலத்தில் சொந்த இடங்களுக்கு சென்றவர்கள் மீண்டும் தலைநகர் கொழும்பிற்கு திரும்புவதற்காக எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விசேட பஸ் மற்றும் ரயில் சே​வைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

Related posts

ரஞ்சன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் [UPDATE]

எதனோல் இறக்குமதிக்கு தடை [VIDEO]

“சம்பந்தனின் பதவி தொடர்பில் அலட்டிக்கொள்ள தேவையில்லை”