உள்நாடு

 பழைய நிலைமைக்கு திரும்ப இருக்கும் எரிபொருள் ஒதுக்கீடு

(UTV | கொழும்பு) –  பழைய நிலைமைக்கு திரும்ப இருக்கும் எரிபொருள் ஒதுக்கீடு

கடந்த பண்டிகைக் காலத்திற்காக அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டை தொடர்ந்தும் பேணுவது குறித்து இன்று (17) தீர்மானிக்கப்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த 4 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.

எவ்வாறாயினும் நாளை (18) முதல் மீண்டும் முன்னர் வழங்கப்பட்ட அளவிலேயே எரிபொருள் ஒதுக்கீட்டை வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.

மேலும் அதிகரிக்கப்பட்ட ஒதுக்கீட்டை அதே முறையில் பேணுவதா அல்லது முந்தைய ஒதுக்கீட்டை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படுமா என்பது குறித்து இறுதி உடன்பாடு எட்டப்படவில்லை என்று எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்லாமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

எகிறும் மரக்கறிகளின் விலைகள்

சமூகவலைத்தளங்களில் வதந்திகளை பரப்பிய 7 பேர் கைது

சில பகுதிகளுக்கான முடக்கம் தளர்வு