உள்நாடு

பழுதடைந்த ரயில் என்ஜின்கள் – வண்டிகள் பற்றி அறிக்கையிட கோரிக்கை

(UTV | கொழும்பு) –  இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரயில் என்ஜின்கள் மற்றும் பெட்டிகள் பழுதானது தொடர்பாக ரயில்வே பொது மேலாளர் அறிக்கை கோரியுள்ளார்.

புகையிரத உப திணைக்களம் மற்றும் போக்குவரத்து உப திணைக்களத்திடம் இருந்து அறிக்கை கோரப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது கொள்வனவு செய்யப்பட்ட வண்டிகளில் இவ்வாறான குறைபாடுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலைமை தொடர்பில் சம்பந்தப்பட்ட இரண்டு திணைக்களத் தலைவர்களிடமும் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

Related posts

தீ விபத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வீடுகளை உடனடியாக புனரமைத்து, மீள்குடியமர்த்த நடவடிக்கை எடுக்குமாறு ஜீவன் தொண்டமான் பணிப்புரை

இறக்காமம் பிரதித் தவிசாளர் ஆசிக் மு.காவிலிருந்து இடைநிறுத்தம் – செயலாளரினால் கடிதம் அனுப்பிவைப்பு.!

editor

சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர்களை இன்று ஜனாதிபதி சந்திக்கிறார்