வகைப்படுத்தப்படாத

பள்ளிவாசல் வளாக நீர்த் தடாகத்தில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

(UTV|GALLE)-காலி மக்குலுவ ​ஜூம்மா பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள நீர்த் தடாகத்தில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

வெலிகம பகுதியில் இருந்து நேற்று தமது உறவினர்கள் வீட்டுக்கு வந்திருந்த சமயமே இந்த அசம்பாவிதம் நேர்ந்துள்ளது.

சம்பவத்தில் வெலிகம பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

நீரில் மூழ்கிய இருவரில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததாகவும், மற்றவர் மீட்கப்பட்டு கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னரே உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மற்றும் பிரதம நீதியரசர் கைது

Serena to face Halep in Wimbledon final

பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 78 மாணவர்கள் விடுவிப்பு