அரசியல்உள்நாடு

பள்ளிவாசலில் சத்தியப் பிரமாணம் செய்த இறக்காமம் பிரதேச சபை உறுப்பினர்!

அம்பாறை மாவட்டம் இறக்காமம் பிரதேச  சபைக்கான சுயேட்சைக்குழு பிரதிநிதியாக போட்டியிட்டு தெரிவான கே.எல்.சமீம் (எல்.எல்.பி) இறக்காமம் பெரிய ஜும் ஆப் பள்ளிவாசலில் வைத்து சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

2025 ஆம் ஆண்டு உள்ளுராட்சி தேர்தல் தொடர்பான விசேட வர்த்தமானி கடந்த சனிக்கிழமை  (31) வெளியாகியானது.

இதற்கமைய இறக்காமம் பிரதேச சபை உறுப்பினராக அஸர் தொழுகையின் பின்னர் இறக்காமம் பெரிய ஜும் ஆப் பள்ளிவாயலில் வைத்து சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

சமாதான நீதவான் பிறை எப். எம் அறிவிப்பாளர் அஸ்வர் முன்னிலையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. பிரதம இமாம்  றசீட் மெளலவி துஆ பிரார்த்தனை செய்தார்.

இறக்காமம் வரலாற்றில் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் பள்ளிவாயலில் சத்தியப் பிரமாணம் செய்தமை இதுவே  முதற் சந்தர்ப்பம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-பாறுக் ஷிஹான்

Related posts

மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடத்தப்படும் – அரசின் எதிர்பார்ப்பும் அதுவே – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

editor

சமையல் எரிவாயு விலையில் மாற்றம்? [VIDEO]

பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணிக்கலாம்