வகைப்படுத்தப்படாத

பள்ளத்தில் பேரூந்து கவிழ்ந்து விபத்து – 23 பேர் உயிரிழப்பு

(UTVNEWS|COLOMBO) – பெரு நாட்டில் பேரூந்து சாலையில் இருந்து 300 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 23 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பேரூந்தில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துள்ளதுடன், இந்த பேரூந்து கஸ்கோவில் உள்ள மலைப்பாங்கான சாலையில் சென்று கொண்டிருந்தபோது சாரதியின் கட்டுப்பாட்டைஇழந்து சாலையில் இருந்து 300 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

மேலும் சுமார் 20 பேர் பலத்த காயம் அடைந்துள்ளதுடன், அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தொடர்ந்து 11வது முறையாக முதலிடத்தில் முகேஷ் அம்பானி

MP Ashu calls for inquiry into Kalagedihena incident

Maximum security for Esala Perahera