உள்நாடுபிராந்தியம்

பள்ளத்தில் கவிழ்ந்த முச்சக்கர வண்டி – இரண்டு பெண்கள், சாரதி காயம்

வெல்லவாய பொலிஸ் பிரிவின் மூன்றாம் தூண் பகுதியில், எல்ல-வெல்லாவாய பிரதான வீதியில், முச்சக்கர வண்டி ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

கதிர்காமத்திற்கு யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளது.

விபத்தில் இரண்டு பெண்கள் மற்றும் சாரதி காயமடைந்து வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் ஒருவர், ஆபத்தான நிலையில், மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பண்டாரவளை, அம்பதண்டேகம பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

இன்றும் எரிபொருள் வரிசையில் நின்ற ஒருவர் பலி

தேசபந்து தென்னகோன் நாளை சரண்டைவாரா?

editor

இன்றும் மின்வெட்டு ஏற்படும் சாத்தியம்