கடந்த 2025.07.15 அன்று அநுராதபுர மாவட்டத்தின் கெக்கிராவ கல்வி வலயத்தில் காணப்படும் பளளுவெவ முஸ்லீம் பாடசாலையில் மிகச் சிறப்பாக நடைபெற்ற வரலாறு பாடம்சார் கண்காட்சி!
பாடசாலையில் அதிபர் திரு. N.A.M. அஜ்மீர் அவர்களின் தலைமையில், கண்காட்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி சிபாயா, பலாகல கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு. கெமுனு பண்டார, ஆசிரிய ஆலோசகர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் உற்சாக கலந்துகொள்ளளுடன் சிறப்பாக நடைபெற்றது.
இந்த அரிய நிகழ்வில், மாணவர்கள் தங்கள் ஆழ்ந்த ஆர்வத்தையும் சிரமமான முயற்சியையும் கொண்டு வரலாற்று முக்கியத்துவமிக்க பொருட்கள் மற்றும் பாரம்பரியக் காட்சிகளை திறமையாக வெளிக்காட்டினார்கள்.
ஒவ்வொரு பிரிவும் ஒரு தனித்துவமான வரலாற்றுக் காலத்தை பிரதிபலிக்கின்றது, எமது பாரம்பரியத்தின் பெருமை, கலாச்சாரத்தின் வளம், இலக்கியத்தின் செழிப்பு, பண்டைய நாகரிகங்களின் மகத்துவம் மற்றும் பண்டையகால அரிய சில உபகரணங்கள் அனைத்தும் இந்தக் கண்காட்சியில் உள்வாங்கப்பட்டிருந்தது.
இந்தக் கண்காட்சி மாணவர்கள் உருவாக்கிய படைப்புக்களின் உன்னத வெளிப்பாடாக மட்டுமல்லாமல், வரலாற்றை புரிந்து கொள்வதற்கான அனுபவத்துடனும் நிறைந்த பயணமாகவும் திகழ்கிறது.
பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வரலாற்றைக் கேட்டு, சிந்தித்து, பார்வையிட்டு உணர்ந்த விதங்கள், கல்வி முறையில் அனுபவம்சார் கற்றலின் மதிப்பை மேலோங்கச் செய்தது.
இந்த வரலாறு பாடம்சார் கண்காட்சியினை பார்வையிட வருகை தந்த பாடசாலைகளினால் பாடசாலையில் அதிபர் திரு. N.A.M. அஜ்மீர் மற்றும் கண்காட்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி. சிபாயா ஆசிரியை ஆகியோரின் தொலைநோக்குத் தலைமைத்துவத்தையும் கல்விச் சிறப்பிற்கான அர்ப்பணிப்பையும் பாராட்டி நினைவுச்சின்னங்களும் வழங்கப்பட்டது.
கற்றல் என்பது புத்தகத்தில் மட்டுமல்ல – அனுபவத்தில் நனையும்போது அதன் விளைவு நீண்டநாள் பிரதிபலிக்கும்.