வகைப்படுத்தப்படாத

பல பிரதேசங்களில் மழை

(UDHAYAM, COLOMBO) – நாட்டில் பல பிரதேசங்களில் இன்று மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கு , ஊவா மாகாணத்திலும் வடமத்திய மாகாணத்திலும் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேற்கு சப்ரகமுவ மத்திய தெற்கு வடமேல் மாகாணங்களிலும் மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்திலும் ஓரளவு மழை பெய்யக்கூடும் என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

புத்தளத்திலிருந்து கொழும்பு காலி ஊடாக மாத்தறை வரையான கடற்கரையோரப்பிரதேசங்களில் ஓரளவு மழை காணப்படும்.

மேற்கு சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் பிபில பிரதேசங்களிலும் சுமார் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலமான காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது இப்பிரதேசங்களில் தற்காலிகமாக கடும் காற்று வீசக்கூடும். இடிமின்னல் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related posts

14 வீரர்களுடன் சென்ற போர் விமானம் மாயம்

අද තවත් තීරණාත්මක තරඟයක්

சகலரும் தமது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும்