வகைப்படுத்தப்படாத

பல பிரதேசங்களில் இன்று இடியுடன் கூடிய மழை

(UDHAYAM, COLOMBO) – பல பிரதேசங்களில் இன்றைய தினம் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், வடமேல், சப்ரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் இவ்வாறு மழை பெய்யக்கூடும் என எதிர்ப்பார்ப்பதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் இடைக்கிடையில் காற்று வீசக்கூடும் எனவும், வடக்கு மற்றும் தென் மாகாணங்களின் கடற் பிரதேசங்களில் மணிக்கு 60 தொடக்கம் 70 கிலோ மீட்டருக்கு இடையில் காற்று வீசக்கூடும் எனவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

279 சீனப்பொருட்கள் மீது கூடுதல் வரி

More rain in Sri Lanka likely

நெவில் பெர்னாண்டோ மருத்துவமனையை அரசுடமையாக்க அனுமதி