நிலவும் மழை மற்றும் சமீபத்திய மண்சரிவு மற்றும் நிலையற்ற நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தால் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மண்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்கள், இக்கட்டான நிலைமைகளைக் கருத்தில் கொண்டு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய நாளை (9) பிற்பகலுக்கு முன் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு பின்வரும் பகுதிகளில் உள்ள மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கண்டி மாவட்டம் – மினிபே, மெததும்பர, பன்வில, தொலுவ, தெல்தோட்டை மற்றும் உடுதும்பர பிரதேச செயலகப் பிரிவுகள்
பதுளை மாவட்டம் – கந்தகெட்டிய, பசறை, பதுளை, லுனுகல, ஹப்புத்தளை, எல்ல, பண்டாரவளை, ஹாலி எல, வெலிமட, மீகஹகிவுல மற்றும் ஊவா பரணகம
மாத்தளை மாவட்டம் – வில்கமுவ, அம்பங்கங்க கோரள, ரத்தோட்டை, நாவுல, உக்குவலை மற்றும் லக்கல பல்லேகம
நுவரெலியா மாவட்டம் – வலப்பனை, நிலடந்தஹின்ன, மதுரட்ட, ஹங்குரான்கெத்த மற்றும் நுவரெலியா
