பல கோரிக்கைகளை முன்வைத்து உடனடி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்த சங்கம், புதிய திருத்தங்கள் உள்ளடங்கிய புகையிரத நிலைய அதிபர் சேவையின் ஆட்சேர்ப்பு நடைமுறையின் 05 பிரதிகளை, அரச சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளரின் கையொப்பத்திற்காக சமர்ப்பிப்பதில் தாமதம் மற்றும் அந்த ஆட்சேர்ப்பு நடைமுறை தொடர்பான இடைக்கால ஏற்பாடுகளுக்கான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதில் தொடர்ந்து ஏற்படும் தாமதம் காரணமாக இந்த உடனடி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்ததாகத் தெரிவித்துள்ளது.
குறித்த பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி உள்ளிட்ட பொறுப்புவாய்ந்த அதிகாரிகளுக்கு கடந்த 09 ஆம் திகதி எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் இதுவரை அதற்கான தீர்வுகள் வழங்கப்படாமை காரணமாக எதிர்வரும் 23 ஆம் திகதிக்குப் பின்னர் இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
