T-56 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் நபர் ஒருவர் அம்பாறை பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தரவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், எல்பிட்டிய – சாதமுல்ல பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது அவரிடமிருந்து T-56 ரக துப்பாக்கி ஒன்றும், 2 மெகசின்கள் மற்றும் 45 தோட்டாக்கள் என்பன மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சாதமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 64 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், இந்த சந்தேகநபர் திட்டமிட்ட குற்றவாளி ஒருவரின் நெருங்கிய உதவியாளர் என்பது தெரியவந்துள்ளது.
மேலும், குறித்த துப்பாக்கியைப் பயன்படுத்தி பல கொலைகளைச் செய்ய சந்தேக நபர் திட்டமிட்டுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் படபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
