பிள்ளையான் போன்றவர்கள் இந்த நாட்டிலே இடம்பெற்ற பல மோசமான செயல்களில் சம்மந்தப்பட்டிருப்பதாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனவே அந்தடிப்படையில் தீர்மானம் மேற்கொள்ளப்படும். அது சட்டரீதியாக இடம்பெறும் என தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் நேற்று முன்தினம் (02) பழைய கச்சேரி மண்டபத்தில், அபிவிருத்திக் குழுத் தலைவரும் அமைச்சருமான சுனில் ஹந்துன்நெத்தி தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது, கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் பிரபு, “தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் என்ற வகையில் நாட்டில் அபிவிருத்தி செயற்பாடுகளை.
முன்னெடுத்து வருகின்றோம். அதனடிப்படையில் மட்டக்களப்பில் பெருந்தெருக்கள் மற்றும் போக்குவரத்து, விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்காவின் அமைச்சின் கீழ் உள்ள திணைக்களங்களில் உள்ள அபிவிருத்தி தொடர்பாகவும் பல திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.