கொழும்பு வடக்கு பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவினால், பல குற்றச்சாட்டுகள் தொடர்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் ‘ஐஸ்’ ரக போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (01) முகத்துவாரம் பொலிஸ் பிரிவின் லெல்லம பகுதியில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேகநபரிடமிருந்து 26 கிராம் 890 மில்லிகிராம் ஐஸ் ரக போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதான சந்தேகநபர், மட்டக்குளி, சமித்புர பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் என தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபர் குறித்து மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில், இவர் பல குற்றங்களுக்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
