உள்நாடு

 பல்கலை கழக மாணவன் விடுதியில் உயிரிழப்பு!

(UTV | கொழும்பு) –  பல்கலை கழக மாணவன் விடுதியில் உயிரிழப்பு!

கஹதுட்டுவ – தியகம தொழில்நுட்ப டிப்ளோமா பல்கலைக்கழக விடுதியில் மயங்கி விழுந்த மாணவன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மாணவன் தனது அறையில் மயங்கி விழுந்து ஹோமாகம வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போதிலும் சிகிச்சைப் பலனின்றி ​​அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தியகம தொழில்நுட்ப டிப்ளோமா பல்கலைக்கழகத்தில் இரண்டாம் வருடத்தில் கல்வி கற்கும் கட்டுகம்பளையைச் சேர்ந்த மலித் யசோதா என்ற 25 வயதுடைய மாணவனே உயிரிழந்துள்ளார்.

கட்டுபொத்த, பொத்துஹெர பிரதேசத்தை சேர்ந்த மாணவியின் பிரேத பரிசோதனை இன்று (03) நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பத்து கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்

பிரதேச சபை ஊழியர்களின் சம்பளம் மோசடி – இருவர் கைது

editor

கடந்த 8 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும், 52 இறப்புகளும் பதிவாகியுள்ளன – அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கை என்ன? சஜித் பிரேமதாச கேள்வி

editor