சூடான செய்திகள் 1

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

(UTVNEWS|COLOMBO) – சம்பள முரண்பாடுகளை முன்வைத்து பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்கள் இன்றும் நாளையும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

தமது சம்பள உயர்வு கோரிக்கைக்கு அமைச்சினால் தீர்வு வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் நிதி அமைச்சருடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையின் மூலம் எந்தவிதத் தீர்வும் எட்டப்படவில்லை என அனைத்து பல்கலைக்கழகத் தொழிற்சங்க ஒன்றியத்தின் தலைவர் தம்மிக எஸ் பிரியந்த தெரிவித்துள்ளார்.

Related posts

யட்டியாந்தோட்டை கோர விபத்தில் 28 பேர் படுகாயம்

பொதுத் தேர்தல் – அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை இன்றும்

பிரச்சினைகளைத் தீர்க்க சகல கட்சிகளும் ஜனாதிபதியுடன் ஒன்றாகப் பாடுபட வேண்டும்