சூடான செய்திகள் 1

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் இன்று(11) முதல் ஏற்பு

(UTV|COLOMBO)-2018ம் ஆண்டுக்குரிய கா.பொ.த  உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி 1ம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட உள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள்  ஆணைக்குழுவின் செயலாளர் கலாநிதி பிரியந்த பிரேமகுமார தெரிவித்தார்.

விண்ணப்பங்களை ஒன்-லைன் முறையில் இணையத்தின் ஊடாக சமர்ப்பிக்க முடியும். இதற்குரிய வழிகாட்டல்கள் அடங்கிய கையேட்டை இன்று முதல் தொடக்கம் முகவர் புத்தகக் கடைகளை விலைக்கு வாங்கலாம் என்றும் அவர் கூறினார்.

இம்முறை 31 ஆயிரத்து 158 மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் அனுமதிக்கப்பட உள்ளனர். கடந்த ஆண்டை விட ஆயிரம் மாணவர்கள் கூடுதலாகச் சேர்த்துக் கொள்ளப்பட இருக்கிறார்.

 

 

Related posts

ஐ.தே.தேசியக் கட்சியின் வரவு செலவுத் திட்டம் சபையில் தோற்கடிப்பு

முக்கிய தீர்மானங்கள் தொடர்பான அரசின் அறிக்கை

ஶ்ரீ.சுதந்திரக் கட்சி மற்றும் ஶ்ரீ.பொதுஜன பெரமுனவுக்கு இடையிலான பேச்சுவார்த்தை இன்று