உள்நாடு

பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்க நடவடிக்கை

(UTV | கொழும்பு) – கொரோனா ஆபத்து இல்லாத மாவட்டங்களில் பல்கலைக்கழகங்களை மீண்டும் திறப்பதற்கான சுற்றறிக்கை இன்று வெளியிடப்பட உள்ளது என பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

குறித்த அறிவிப்பை தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகங்களை மே 11 திகதி மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டிருந்தாலும், கொழும்பில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரிப்பின் காரணமாக இந்த முடிவு மறுபரிசீலனை செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளளார்.

திறக்கப்படும் பல்கலைக்கழகங்கள் ஆய்வு நோக்கங்களுக்காக 10% அல்லது 20% கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களுடன் மட்டுமே திறக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

Related posts

ரணிலை நேரில் சந்தித்து, இறுதி தீர்வு கட்டப்போகும் சம்மந்தன்!

 10 மணிநேர நீர்வெட்டு இன்று!

நனோ நைட்ரஜன் திரவ உர இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி