பலாங்கொடை, ஹல்பே, ரத்தனகொல்ல மலையில் இன்று (08) திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
நிலவும் வறண்ட காலநிலை காரணமாக இந்தத் தீ வேகமாகப் பரவி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், ராணுவத்தினரும், பிரதேசவாசிகளும் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தீயை அணைக்கும் பணிக்கு பெல் 412 ரக ஹெலிகாப்டர் ஒன்றும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-சிவா ஸ்ரீதரராவ் இரத்தினபுரி நிருபர்