உள்நாடுசூடான செய்திகள் 1

பலஸ்தீன் மக்களுக்காக குரல் கொடுக்கவுள்ள இலங்கை பாராளுமன்றம்!

(UTV | கொழும்பு) –

பலஸ்தீன் மக்கள் தற்­போது எதிர்­கொள்ளும் சவால்கள் தொடர்­பாக எதிர்­வரும் 18 ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தில் சபை ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ர­ணை­யாக விவா­திப்­ப­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

சபா­நா­யகர் மஹிந்த யாப்பா அபே­வர்த்­தன தலை­மையில் கடந்த வாரம் கூடிய பாரா­ளு­மன்ற நட­வ­டிக்­கைகள் தொடர்­பான குழு கூட்­டத்­தி­லேயே இந்த தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. இது தொடர்­பாக எதிர்க்­கட்­சி­யினால் முன்­வைக்­கப்­பட்ட பிரே­ர­ணைக்கே பாரா­ளு­மன்ற நட­வ­டிக்­கைகள் தொடர்­பான குழு அனு­மதி வழங்கி இருக்­கி­றது.

குறித்த பிரே­ரணை சபை ஒத்­தி­வைப்பு வேளை விவா­த­மா­கவே அன்­றைய தினம் எதிர்க்­கட்­சி­யினால் கொண்­டு­வ­ரப்­பட இருக்­கி­றது. விவா­தத்தை பிற்­பகல் 1.30 மணி முதல் மாலை 5.30 மணி­வரை நடத்­தவும் இதன்­போது தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

பலஸ்தீன் மக்கள் தற்­போது எதிர்­கொள்ளும் சிர­மங்கள் தொடர்­பாக பாரா­ளு­மன்­றத்தில் இடம்­பெ­ற­வுள்ள விவா­தத்தை பார்­வை­யி­டு­வ­தற்­காக இலங்கை பலஸ்தீன் பாரா­ளு­மன்ற நட்­பு­ற­வுச்­சங்க உறுப்­பி­னர்கள் மற்றும் இலங்­கையில் இருக்கும் அரபு நாடு­களின் தூது­வர்கள் உள்­ளிட்ட வெளி­நாடு­களின் தூதுவர்கள் உயர்ஸ்­தா­னி­கர்கள் என பலரும் அன்­றைய தினம் பாரா­ளு­மன்ற கல­ரிக்கு வருகை தரவுள்ளனர்.

மேலும் இந்த விவா­தத்தை எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆரம்பித்து வைத்து உரையாற்ற இருப்பதுடன் ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் இதில் கலந்துகொண்டு உரையாற்ற இருக்கின்றனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இலங்கையின் பொருளாதார பின்னடைவுக்கு முன்பு காணப்பட்ட அரசியல் கலாசாரமே காரணம்

editor

ரணிலின் பாதுகாப்பு தொடர்பில் வௌியான தகவல் பொய்யானது

editor

எக்ஸ்பிரஸ் பேர்ல் பேச்சுவார்த்தை வெற்றி!