பிரித்தானிய அரசாங்கம் பலஸ்தீனத்திற்கு ஆதரவான குழுவை தடை செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்ற நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது நேற்று (22) மத்திய லண்டனில் இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது குறைந்தது 90 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பெருநகர பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
போராட்டத்தின்போது இனப்படுகொலையை நான் எதிர்க்கிறேன்” மற்றும் “பலஸ்தீன நடவடிக்கையை ஆதரிக்கிறேன்” உள்ளிட்ட வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்திச் சென்றதாக கூறப்படுகிறது.
அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டவர்களில் முதியவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
