உள்நாடுகாலநிலை

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கை இன்று (05) இரவு 11.00 மணி வரை அமுலில் இருக்கம் என்று அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் இடியுடன் கூடிய பாரிய மின்னல் தாக்கங்கள் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் அந்தத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, ​​அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.

மின்னல் அபாயத்தைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

Related posts

இன்று 26க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் இரத்து

Scan Jumbo Bonanza 2023 : விசுவாசம் மிக்க 50 வாடிக்கையாளர்களுக்கு சைக்கிள்கள்

கொரோனா மரணங்கள் 46