உள்நாடு

பலத்த மழை பெய்ய வாய்ப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

சப்ரகமுவ மாகாணத்திலும், நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் சில இடங்களில் சுமார் 75 மி.மீ. அளவில் ஓரளவு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பலத்த மழை எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள், வடக்கு, வடமத்திய, வடமேல், மத்திய, தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் அவ்வப்போது மணிக்கு 55-60 கி.மீ. வேகத்தில் கடும் காற்று வீசக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் மிதமான கடும் காற்று வீச வாய்ப்புள்ளது.

பலத்த காற்று மற்றும் மழையால் ஏற்படக்கூடிய விபத்து அபாயங்களைக் குறைப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

Related posts

ஒரு தொகை வெளிநாட்டுச் சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

ரிஷாத் பாராளுமன்றம் வருவதில் சட்டரீதியான தடைகள் இல்லை

நாளை முதல் ரயில் நிலையங்களில் விசேட சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறை