சூடான செய்திகள் 1

பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO)  இந்து சமுத்திரத்திற்கு மேலாகவும் அருகிலுள்ள தென்மேற்கு வங்காள விரிகுடாவிலும் இலங்கைக்கு தென்கிழக்காக ஏப்ரல் 25ஆம் திகதியளவில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

பொதுமக்களும் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் குறித்து வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களத்தால் வழங்கப்படும் ஆலோசனைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடமத்திய மாகாணத்திலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

 

 

Related posts

மே மதம் 15 – 21ம் திகதி வரையிலான காலப்பகுதி வெசாக் வாரமாக பிரகடனம்…

லண்டன் செல்ல முற்பட்ட உடுவே தம்மாலேக தேரர் விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டார்

நாகந்த கொடிதுவக்குவிற்கு எதிராக இடைக்கால தடை