உலகம்

பருவநிலை மாநாட்டில் பிரித்தானிய மகாராணி கலந்துகொள்ளவில்லை

(UTV | பிரித்தானியா) – பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத், மேலும் 02 வாரங்கள் ஓய்வில் இருப்பாரென பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.

ஆகவே, மகாராணி பருவநிலை மாநாட்டில் கலந்துகொள்ள மாட்டார் என அரண்மனை அறிவித்துள்ளது.

95 வயதான பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத், கடந்த வாரம் வழக்கமான சோதனைகளுக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், வைத்தியர்களின் பரிந்துரைக்கு அமைவாக அவர் மேலும் 02 வாரங்களுக்கு ஓய்வில் இருக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இத்தாலி ஜெட் விமான விபத்தில் எட்டு பேர் பலி

whatsapp இல் புதிய வசதி அறிமுகம்

ஈரான் மீது தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா – முழு விபரம்

Shafnee Ahamed