உள்நாடு

பரீட்சை திகதிகள் தொடர்பிலான அறிவிப்பு ஒத்திவைப்பு

(UTV|கொழும்பு) – நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் தொற்றை கருத்திற் கொண்டு, 2020 ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர் தர பரீட்சை மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகள் ஆகியவற்றிற்கான திகதிகளை தற்பொது அறிவிக்காதிருப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்று(14) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த பரீட்சைகளை நடத்துவதற்கான திகதிகள் தொடர்பில் நேற்று அறிவிக்கப்படவிருந்த நிலையில், இந்த தீர்மானம் எடுக்கட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

ரயில்வே திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை

எரிபொருள் நெருக்கடியினை சமாளிக்க அரசுக்கு யோசனைகள் முன்வைப்பு

இணையவழி கற்பித்தல் பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தும்