கோட்டை பொலிஸ் பிரிவின் காலி முகத்திடல் பகுதியில் பயணி ஒருவரின் டிக்கெட்டுக்கான பணத் தொகை தொடர்பாக நடத்துனருக்கும் மற்றொரு நபருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு அதிகரித்ததை அடுத்து, பயணியை தடியால் தாக்கியதற்காக நடத்துனர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாணந்துறையின் திரிபெரிய பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய பேருந்து நடத்துனர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இன்று (04) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தாக்குதல் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவியது, மேலும் இது குறித்து பொலிஸார் விசாரணைகளைத் ஆரம்பித்துள்ளனர்.
சம்பவம் குறித்து மேலும் விசாரணைகளை கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
