உள்நாடு

பதுளை மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

பதுளை மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று (09) முற்பகல் 11 மணிக்கு விடுமுறை வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊவா மாகாண கல்வி பணிப்பாளர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

இது தொடர்பான அறிவிப்பானது மாவட்டத்தின் வலயக் கல்வி பணிப்பாளர்கள் மற்றும் பாடசாலைகளின் அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய எதிர்வுகூறல்கள் மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள மண்சரிவு தொடர்பான விசேட எச்சரிக்கை அறிவித்தல் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

புத்தளம் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்குரிய ஓய்வூதியம்

சிந்தித்து சிறந்த தீர்மானத்தை எடுத்தால் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் – நாமல் ராஜபக்ஷ

editor