உள்நாடு

பதிவு செய்யப்படாத சீனி களஞ்சியசாலைகளை தேடி விசேட சுற்றிவளைப்புகள்

(UTV | கொழும்பு) – நுகர்வோர் அதிகார சபையிடம் பதிவு செய்யாமல் உள்ள சீனி களஞ்சியசாலைகளை அடையாளம் காண்பதற்காக விசேட சுற்றிவளைப்புகள் அந்த அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சந்தையில் சீனியின் விலை அதிகரித்துள்ள நிலையில் இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சீனியை பதுக்கி வைத்துள்ளமை தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாக நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.

அவ்வாறு சீனியை பதுக்கி வைத்திருந்த 4 களஞ்சியசாலைகளில் நுகர்வோர் அதிகார சபையினால் கடந்த நாட்களில் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது 5,400 மெற்றிக் டன் சீனி கைப்பற்றப்பட்டது.

நாட்டுக்கு சீனியை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் மற்றும் நபர்கள் நுகர்வோர் அதிகார சபையில் பதிவு அறிவித்தல் செய்யப்பட வேண்டும்.

எனினும் சீனி களஞ்சியசாலைகளை விடுத்து வேறு சில இடங்களில் சீனி பதுக்கி வைக்கப்படுகின்றமை தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் இவ்வாறு பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களை அபராத தொகைக்கு மேலதிகமாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி சிறைதண்டனை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண சட்டமா அதிபருடன் கலந்துரையாடியுள்ளார்.

Related posts

பஸ் – கெப் வாகனம் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து – 5 பேர் காயம்!

editor

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் மேலும் ஐந்து வேட்பாளர்கள் கைது

editor

இலங்கையின் Startup Ecosystem-ல் புதிய முன்னேற்றம்!

editor