உள்நாடு

பண மோசடி – இந்திய பிரஜை ஒருவர் கைது

(UTV|கொழும்பு) – கனடாவில் வேலை வாய்ப்பை பெற்றுத் தருவதாக தெரிவித்து ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் இந்திய பிரஜை ஒருவர் பம்பலப்பிட்டியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

32 வயதுடைய குறித்த நபர் கொழும்பு மோசடி விசாரணை பிரிவினரால் நேற்று(08) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் கொழும்பு மோசடி விசாரணை பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

பாடசாலை போக்குவரத்துகள் குறித்து விசேட திட்டம்

மட்டக்களப்பில் அனுமதி பத்திரமின்றி பேருந்துகள் : 11 பஸ்கள் வலைவீச்சு

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை அதிகரிப்பு