அரசியல்உள்நாடு

பண்டாரவளை மாநகர சபை அதிகாரம் தேசிய மக்கள் சக்தி வசம்

பண்டாரவளை மாநகர சபையின் அதிகாரத்தை நிலைநாட்டுவதில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.

அதன்படி, அந்த மாநகர சபையின் மேயராக தேசிய மக்கள் சக்தியின் மாநகர சபை உறுப்பினர் ரத்நாயக்க முதியன்செலாகே சாகர தீர விஸ்வவிக்ரம தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

​மேயர் பதவிக்காக இன்று (11) நடைபெற்ற தேர்தலில் 04 மேலதிக வாக்குகளால் வெற்றுப்பெற்று அவர் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பண்டாரவளை மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தி 06 உறுப்பினர்களை கொண்டுள்ள அதேநேரத்தில் சுயேச்சை குழு எண்1, 05 உறுப்புனர்களை கொண்டுள்ளது.

அதே மாநகர சபையில் ஐக்கிய மக்கள் சக்தி 03 உறுப்பினர்களை கொண்டுள்ளது.

அத்துடன் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் 02 சுயேச்சை குழுக்கள் தலா ஒரு உறுப்பினர்களை கொண்டுள்ளன.

Related posts

IMF இனது தீர்வுகள் SJP தீர்வுகளை ஒத்ததாக உள்ளது

கரதியான குப்பை மேட்டில் தீ பரவல்

ஐக்கிய தேசிய கட்சி எடுத்துள்ள அதிரடி தீர்மானம்

editor