உள்நாடுவிசேட செய்திகள்

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கடும் நெரிசல் – விமானங்களைத் தவறவிட்ட பயணிகள்

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) நேற்று இரவு கடுமையான நெரிசல் ஏற்பட்டதாகவும், செக்-இன் மற்றும் குடிவரவுப் பிரிவுகளில் நீண்ட வரிசைகள் காணப்பட்டதாகவும் பயணிகள் பலர் முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.

இந்த தாமதங்கள் காரணமாக தாம் தமது விமானப் பயணத்தை கிட்டத்தட்டத் தவறவிட்டதாகப் பல பயணிகள் கூறியுள்ளதுடன், புறப்படும் பகுதிகள் சன நெருக்கடியாகக் காணப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

பயணிகளின் கருத்துப்படி, ஒரே நேரத்தில் பல விமானங்கள் திட்டமிடப்பட்டிருந்ததால், விமான நிலையம் அதன் கொள்ளளவுக்கு அதிகமாக இயங்குவதாகவும், இதனால் கடும் நெரிசல் ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர்.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் இதனால் பாதிக்கப்பட்டனர், பலர் இந்த குழப்பமான சூழ்நிலை குறித்து அதிருப்தியை வெளியிட்டனர்.

Related posts

குடும்பங்களுக்கு, காப்புறுதித் தொகையை கோரும் MPக்கள்!

அரச மற்றும் தனியார் ஊழியர்களின் ETF – EPF தொடர்பில் அரசு நடவடிக்கை

செப்டம்பர் மாதம் இடைக்கால வரவு-செலவுத்திட்டம்