உள்நாடு

பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் கைது

பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் இவர் இன்று (09) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2025 வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அநுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த டபிள்யூ.எச். அதுல திலகரத்ன என்பவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இருப்பினும், அந்த நபருக்கு மன்னிப்பு வழங்கப்படவில்லை என்பதை ஜனாதிபதி செயலகம் உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

இது தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இன்று 3ஆவது நாளாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நாளைய தினம் (10) புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.

Related posts

பதினைந்து பேரடங்கிய சர்வகட்சி அரசுக்கு ஜனாதிபதி இணக்கம்

அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்

சில பிரதேசங்களுக்கு நிலச்சரிவு அபாய எச்சரிக்கை